Saturday 17 July, 2010

செம்மொழி மாநாட்டை விமர்சித்தோர் மீது கருணாநிதி அரசின் பாசிசத் தாக்குதல்!

அன்பார்ந்த தமிழீழமக்களே, புலம் பெயர் தமிழர்களே, மாணவர்களே, இளைஞர்களே, உழைக்கும் மக்களே;
கடந்த ஜூன் மாதம் தமிழக முதலமைச்சர் கருணாநிதி கோவையில் செம்மொழி மாநாடு ஒன்றினை நடத்தினார்.பழந்தமிழ் பெருமை பேசி இன்றைய தமிழரின் அவலம் மறைக்க முயன்றார்.இறுதி யுத்தத்தில் இந்திய விஸ்தரிப்புவாதத்தை ஆதரித்து நின்று ஈழத்தமிழர்களுக்கு இழைத்த துரோகத்தை மூடி மறைக்கலாம் என கனவு கண்டார்.தமிழீழத்தில் இருந்து சிவத்தம்பி போன்ற பரம்பரை ஆண்டிகளை மேடையில் அமர்த்தி அவர்களின் புகழாரம் மூலம் தமிழக மக்களை ஏமாற்றத்திட்டமிட்டார்.ஆனால் அவரது திட்டம் படுதோல்வியில் முடிந்தது.
அகில இந்திய ஆளும் வர்க்கங்களிடம் சரணாகதி அடையும் கருணாநிதியின் சந்தர்ப்பவாத அரசியலை, செம்மொழி மாநாட்டு எதிர்ப்புப் பிரச்சாரத்தில் தோலுரித்துக்காட்டினர் தமிழகத்தின் புரட்சிகர சக்திகள்.தனது சந்தர்ப்பவாத அரசியல் தமிழக மக்களிடையே அம்பலமாவதால் தான் தமிழக மக்களிடையே இருந்து தனிமைப்படுவதைக் கண்டு அஞ்சி செம்மொழி மாநாட்டை விமர்சித்தோர் மீது கருணாநிதி அரசு பாசிசத் தாக்குதலைக் கட்டவிழ்த்துள்ளது.இதைக் கண்டிப்பதும், நிறுத்தக் கோருவதும், புரட்சிகர இயக்கங்களுக்கு ஆதரவளிப்பதும் நமது ஜனநாயகக் கடமையாகும்.

இந்திய விஸ்தரிப்புவாதத்தின் தமிழகக் காவலன் கருணாநிதியே,
* அகில இந்திய ஆளும் வர்க்கங்களிடம் சரணாகதி அடையும் உனது சந்தர்ப்பவாத அரசியலை, செம்மொழி மாநாட்டு எதிர்ப்புப் பிரச்சாரத்தில் தோலுரித்துக்காட்டிய தோழர்கள் மீது தொடுக்கும் பாசிசத் தாக்குதலை உடனே நிறுத்து!
* கைதி செய்த போராளிகளை உடனே விடுதலை செய்!
* புரட்சிகர இயக்கங்களின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல் தொடுக்காதே!
* விமர்சனச் சுதந்திரத்தை நசுக்காதே!
* தமிழகத்தின் தமிழீழ ஆதரவு இயங்கங்களை ஒடுக்காதே!
* தமிழை வைத்து நடத்திய பிழைப்பு போதும், தமிழும் தமிழகமும் தமிழரும் வாழ வழி விட்டு ஒதுங்கு!
* தமிழீழமக்களே, புலம் பெயர் தமிழர்களே; இந்திய விஸ்தரிப்புவாதத்தை உறுதியாக எதிர்க்கும் தமிழகத்தின் புரட்சிகர சக்திகளோடு ஒன்றுபடுங்கள்!
============= புதிய ஈழப்புரட்சியாளர்கள்.====================
=========================
செம்மொழி மாநாட்டை விமர்சித்தோர் மீது கருணாநிதி அரசின் பாசிசத் தாக்குதல்!
(மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம் வெளியிட்ட பிரசுரம்)
“பழந்தமிழ் பெருமை பேசி இன்றைய தமிழரின் அவலம் மறைக்கவே செம்மொழி மாநாடு” என்ற தலைப்பிட்ட பிரசுரத்தை மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம் மக்களிடம் வினியோகம் செய்தது. கோவை செம்மொழி மாநாட்டை எதிர்த்த இந்தப் பிரச்சாரத்தை முடக்குவதற்காக

- ம.ஜ.இ.க வின் அமைப்பாளர் உள்ளிட்ட முன்னணியினர் கைது;
- செம்மொழி மாநாடு நுழைவாயிலில் பிரசுரத்தை வினியோகம் செய்த ஞானம் உள்ளிட்ட ஐவர் மீது கொலைவெறித் தாக்குதல்;
- சென்னையில் ம.ஜ.இ.க தலைமை அலுவலகம் சூறையாடல்;
- சுவரொட்டியை அச்சிட்ட அச்சகத்தினர் மீது வழக்கு;
- கோவையில் செம்மொழி மாநாட்டை எதிர்த்து பிரச்சாரம் செய்த ம.ஜ.இ.க வினருக்கு வீடு வாடகைக்கு கொடுத்த வீட்டுச் சொந்தக்காரருக்கு மிரட்டல்;
- செம்மொழி மாநாட்டை எதிர்த்துப் பிரச்சாரம் செய்த புரட்சிகர இளைஞர் முன்னணியினர் கைது;
- அ.இ.அ.தி.மு.க பழ கருப்பையா மீதும் தாக்குதல்;
- தமிழ் மொழியை நீதிமன்ற மொழியாக ஆக்கக்கோரி உண்ணாவிரதம் இருந்த வழக்கறிஞர்கள் கைது;

இவ்வாறு செம்மொழி மாநாட்டை விமர்சிக்கும் உரிமையை பறிப்பது ஜனநாயக உரிமையை பறிக்கும் செயலாகும். இந்தத் தாக்குதல் பாசிசத் தன்மை கொண்ட கொடூர தாக்குதலாகும்.

எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்று முழங்கும் கருணாநிதி ஆட்சி, ஆங்கிலம் இந்தி மொழிகளின் ஆதிக்கத்தை எதிர்த்தும், தமிழ் மொழியை ஆட்சிமொழியாக, பயிற்றுமொழியாக ஆக்கக் கோரியும் குரல்கொடுத்தோர் மீது மூர்க்கத்தனமாக தாக்குதல் தொடுத்தது ஏன்?

(மேலும்)

No comments: